கல்லாமை
குறள் # 401
அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல்
குறள் # 402
கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று
குறள் # 403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின்
குறள் # 404
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுஉடை யார்
குறள் # 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்
குறள் # 406
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர்
குறள் # 407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று
குறள் # 408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு
குறள் # 409
மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்து கற்றார் அனைத்திலர் பாடு
குறள் # 410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்

