கேள்வி
குறள் # 411
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை
குறள் # 412
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்
குறள் # 413
செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
குறள் # 414
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை
குறள் # 415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்
குறள் # 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
குறள் # 417
பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்
குறள் # 418
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி
குறள் # 419
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது
குறள் # 420
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும்வாழினும் என்?

