குறள்

கல்வி
குறள் # 391
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக
குறள் # 392
எண்என்ப ஏனைய எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
குறள் # 393
கண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு
புண்உடையர் கல்லா தவர்
குறள் # 394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
குறள் # 395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்
குறள் # 396
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு
குறள் # 397
யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
குறள் # 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
குறள் # 399
தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
குறள் # 400
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு;
மாடுஅல்ல மற்றை யவை