குறள்

வாய்மை
குறள் # 291
வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல்
குறள் # 292
பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
குறள் # 293
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
குறள் # 294
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்
குறள் # 295
மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு
தானம்செய் வாரின் தலை
குறள் # 296
பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்
குறள் # 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
குறள் # 298
புறம்தூய்மை நீரான் அமையும்; அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்
குறள் # 299
எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
குறள் # 300
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற