குறள்
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
குறள் விளக்கம்
(புலவர்களாகிய) நாங்கள் மெய்ப்பொருளை உணர்த்தும் நூல்களாக, கற்று அறிந்தவைகளில் உள்ளதை உள்ளவாறு உரைக்கும் உண்மைபேசும் பண்பாகிய அறத்தைக் காட்டிலும் எந்த வகையிலும் சிறப்புடையதாகச் சொல்லப்பட்ட மற்ற அறங்கள் ஏதுமில்லை.