குறள்
எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
குறள் விளக்கம்
அனைத்து (சூரியன், சந்திரன், நெருப்பு முதலான) புற இருளைப் போக்குகின்ற ஒளிரும் பொருள்களும், துறவினால் நிறைந்தோர்களால் ஒளிர்விப்பவைகளாகக் கருதப்படுவதில்லை. அக இருளாகிய அறியாமையை அகற்றி, மெய்யறிவை ஒளிர்விக்கும் (உணர்த்தும்) ஆற்றல் படைத்த பொய் பேசாமை எனும் சிறப்புப் பண்பாகிய அக ஒளியே ஒளியாகும்.