நல்குரவு
குறள் # 1041
இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் இன்மையே இன்னா தது
குறள் # 1042
இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்
குறள் # 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை
குறள் # 1044
இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும்
குறள் # 1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்
குறள் # 1046
நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் நோக்கப் படும்
குறள் # 1047
அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்
குறள் # 1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு
குறள் # 1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதுஒன்றும் கண்பாடு அரிது
குறள் # 1050
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உட்பிற்கும் காடிக்கும் கூற்று

