குறள்

உழவு
குறள் # 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை
குறள் # 1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
குறள் # 1033
உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர்
குறள் # 1034
பலௌடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுஉடை நீழ லவர்
குறள் # 1035
இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
கைசெய்துஊண் மாலை யவர்
குறள் # 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டோம்என் பார்க்கும் நிலை
குறள் # 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்
வேண்டாது சாலப் படும்
குறள் # 1038
ஏரினும் நன்றால் எருஇடுதல்; கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு
குறள் # 1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்
குறள் # 1040
இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்