இரவு
குறள் # 1051
இரக்க இரத்தக்கார்க் காணின்; சுரப்பின் அவர்பழி தம்பழி அன்று
குறள் # 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்
குறள் # 1053
கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து
குறள் # 1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு
குறள் # 1055
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்நின்று இரப்பவர் மேற்கொள் வது
குறள் # 1056
சுரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்
குறள் # 1057
இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம் உள்ளுள் உடைப்பது உடைத்து
குறள் # 1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று
குறள் # 1059
ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை?
குறள் # 1060
இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்புஇடும்பை தானேயும் சாலும் கரி

