பிறன்இல் விழையாமை
குறள் # 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்(து) அறம்பொருள் கண்டார்கண் இல்
குறள் # 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்
குறள் # 143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகுவார்
குறள் # 144
எனைத்துணையர் ஆயினும் என்ஆம்? தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல்
குறள் # 145
எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி
குறள் # 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண்
குறள் # 147
அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலான் பெண்மை நயவா தவன்
குறள் # 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு) அறன்ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு
குறள் # 149
நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பின் பிறற்குஉரியாள் தோள்தோயா தார்
குறள் # 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று

