குறள்

ஒழுக்கம் உடைமை
குறள் # 131
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
குறள் # 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
குறள் # 133
ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
குறள் # 134
மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
குறள் # 135
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு
குறள் # 136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து
குறள் # 137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
குறள் # 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
குறள் # 139
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்
குறள் # 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்