குறள்
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று
குறள் விளக்கம்
ஒருவன் நற்செயல்களை கட்டுப்பாட்டுடன் செய்யாமால் தீச்செயல்களைச் செய்தாலும் பிறனொருவனுடைய அறவாழ்விற்குத் துணைபுரிகின்ற பெண்ணை (மனைவியை) நாடிச் செல்லாமை பெரும் நன்மையை (புண்ணியத்தை) அருளும்.