பொறையுடைமை
குறள் # 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
குறள் # 152
பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை மறத்தல் அதனினும் நன்று
குறள் # 153
இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை
குறள் # 154
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை போற்றி ஒழுகப் படும்
குறள் # 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து
குறள் # 156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்
குறள் # 157
திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று
குறள் # 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்
குறள் # 159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்
குறள் # 160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்

