Kural

திருக்குறள் #148
குறள்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறன்ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு
குறள் விளக்கம்
அறிவிற் சிறந்த பெரியோர்களுக்கு, பிறனது மனையாளை தவறான எண்ணத்துடன் பார்க்காத தன்னைத்தான் ஆளும் பேராற்றல் பிற்காலத்தில் இன்பத்தைத் தரும் புண்ணியம் மட்டுமல்ல, கடைப்பிடிக்கும் காலத்திலேயே பேரின்பத்தைத் தரும் தெய்வீகமான ஒழுக்கமும் ஆகும்.
குறள் விளக்கம் - ஒலி