வரைவில் மகளிர்
குறள் # 911
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்
குறள் # 912
பயந்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்பில் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்
குறள் # 913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில் ஏதீல் பிணம்தழீஇ யற்று
குறள் # 914
பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்
குறள் # 915
பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி நவர்
குறள் # 916
தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்நலம் பாரிப்பார் தோள்
குறள் # 917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின் பேணிப் புணர்வர் தோள்
குறள் # 918
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப மாய மகளிர் முயக்கு
குறள் # 919
வரைவுஇலா மாணிழையார் மெந்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு
குறள் # 920
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு

