Kural

திருக்குறள் #920
குறள்
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
குறள் விளக்கம்
பொருள்மீதும் மனிதர் மீதும் ஆசைகொண்ட இரண்டு மனங்களைக் கொண்ட பொதுமகளிரின் தொடர்பும் அறியாமையைக் கொடுக்கின்ற கள்ளும் பொருளை இழக்கச் செய்கின்ற சூதாட்டமும் திருமகளால் விலக்கப்பட்டவர்களுடைய நட்புகளாகும்.