குறள்
பயந்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்பில் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்
குறள் விளக்கம்
ஒருவரிடம் உள்ள பொருளின் அளவை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு இனிய சொற்களைப் பேசுகின்ற பண்பில்லாத பொதுமகளிரின் நடத்தையை நன்கு ஆராய்ந்து பார்த்து, அவரோடு சேராமல் விட்டுவிடுதல் வேண்டும்.