குறள்

கள் உண்ணாமை
குறள் # 921
உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார்
குறள் # 922
உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரான்
எண்ணப் பட வேண்டா தார்
குறள் # 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி?
குறள் # 924
நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
குறள் # 925
கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்அறி யாமை கொளல்
குறள் # 926
துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்
குறள் # 927
உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர்
குறள் # 928
களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்
குறள் # 929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைக் தீத்துரீஇ யற்று
குறள் # 930
கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால்
உள்ளாங்கொல் உண்டதன் சோர்வு