குறள்

பெண்வழிச் சேறல்
குறள் # 901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார், வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
குறள் # 902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
குறள் # 903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
குறள் # 904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறுஎய்தல் இன்று
குறள் # 905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
குறள் # 906
இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்
அமைஆர்தோள் அஞ்சு பவர்
குறள் # 907
பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணூடைப்
பெண்ணே பெருமை உடைத்து
குறள் # 908
நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்
குறள் # 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்
குறள் # 910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்துஆம் பேதமை இல்