ஊக்கம் உடைமை
குறள் # 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார் உடையது உடையரோ மற்று
குறள் # 592
உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்
குறள் # 593
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார்
குறள் # 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையா நுழை
குறள் # 595
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு
குறள் # 596
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து
குறள் # 597
சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையும்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு
குறள் # 598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு
குறள் # 599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்
குறள் # 600
உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதுஇல்லார் மரம்;மக்கள் ஆதலே வேறு

