குறள்
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு
குறள் விளக்கம்
நின்றநீரின் அளவினவாம் தாமரை போன்ற மலர்கள் நிறைந்த குளத்தில் நீரானது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அவ்வளவு நீளம் அங்குள்ள மலர்களுடைய தண்டுகளின் நீளங்கள் அமையும். அதுபோல மனிதர்களுடைய ஊக்கத்தின் அளவு (ஆழத்தைப் பொறுத்தே) அவர்களது வளர்ச்சியும் மேன்மையும் அமையும்.