Kural

திருக்குறள் #596
குறள்
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
குறள் விளக்கம்
தலைவன் அல்லது அரசன் எண்ணுவதெல்லாம், தனது பொறுப்பிலுள்ள அமைப்பின் உயர்விற்கான (வழிமுறைகளையே) ஆழ்ந்து எண்ணிச் செயல்பட வேண்டும். அந்த உயர்வானது (மேன்மைப்பயனானது) (ஒருவேளை ஊழினால் அப்பொழுது) நிறைவேறாமல் போனாலும் (அந்த ஆழ்ந்த உயர்வெண்ணமானது) நீங்காத தன்மையை உடையதாகும்.