Kural

திருக்குறள் #597
குறள்
சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையும்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு
குறள் விளக்கம்
யானை போர்க்களத்தில் அம்புகளால் தைக்கப்பட்டு புண்பட்டாலும், தளராமல் நகர்ந்துசென்று போரிட்டு தனது வலிமையை நிலைநிறுத்தும். அதுபோல ஊக்கப்பண்பில் மேலோங்கியவர் தாம் நினைத்த குறிக்கோளை அடையும் முயற்சியில் தமது உடலுக்கு அழிவே ஏற்பட்டாலும் தளரமாட்டார். தளராமல் செயல்பட்டு ஊக்கத்தின் சிறப்பை உணர்த்தி நிலை நாட்டுவார்.