மடி இன்மை
குறள் # 601
குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும் மாசுஊர மாய்ந்து கெடும்
குறள் # 602
மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்
குறள் # 603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து
குறள் # 604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு
குறள் # 605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்
குறள் # 606
படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது
குறள் # 607
இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்
குறள் # 608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்
குறள் # 609
குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடிஆண்மை மாற்றக் கெடும்
குறள் # 610
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு

