குறள்
உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதுஇல்லார்
மரம்;மக்கள் ஆதலே வேறு
குறள் விளக்கம்
ஒருவனுக்கு வளமளிப்பது (உண்மைச் செல்வத்தை வளர்ப்பது) உள்ளத்தில் உள்ள ஊக்கப் பண்பாகும். அவ்வூக்கப்பண்பு இல்லாதவர் பட்டுப்போன மரத்திற்கு நிகராவர். மரத்திற்கும் ஊக்கமில்லாதவருக்கும் உள்ள வேற்றுமை என்னவென்றால் மனித உடல் மட்டுமே! வேறொன்றும் வேற்றுமையில்லை.