Kural

திருக்குறள் #511
குறள்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
குறள் விளக்கம்
தன்னிடம் கொடுக்கப்பட்ட பணியின் நல்ல தன்மையையும், தீய தன்மையையும் ஆராய்ந்தறிந்து நலம் தருவனவற்றையே செய்ய விரும்பும் இயல்புடையவனை அரசன் அல்லது தலைவன் விரும்பி ஆள்வான்.