தெரிந்து தெளிதல்
குறள் # 501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்
குறள் # 502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு
குறள் # 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு
குறள் # 504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்
குறள் # 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
குறள் # 506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி
குறள் # 507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாம் தரும்
குறள் # 508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்
குறள் # 509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்
குறள் # 510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்

