புலால் மறுத்தல்
குறள் # 251
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்
குறள் # 252
பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
குறள் # 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்
குறள் # 254
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்
குறள் # 255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு
குறள் # 256
தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்
குறள் # 257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன் புண்அது உணர்வார்ப் பெறின்
குறள் # 258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்
குறள் # 259
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று
குறள் # 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்

