குறள்
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்
குறள் விளக்கம்
தவம் செய்பவர் மனதில் ஆழ்ந்து எண்ணுவாரானால் அவரது தவவலிமையினால் அறத்தை வெறுக்கும் பகைவரை அழித்தலும் தனக்கு விருப்பமான அறச்செயல்களை விரும்பிச் செய்பவரை பாதுகாத்து உயர்த்துதலும் இயலும்.