குறள்
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
குறள் விளக்கம்
நெருப்பால் வாட்டப்படும் தங்கமானது (அழுக்கு நீங்கி) ஒளிர்வதைப் போல தவம் செய்பவருக்கு (தவத்தை மேற்கொள்வதால் ஏற்படும்) துன்பம் (தன்னை) வாட்ட வாட்ட (தன்னைச் சார்ந்துள்ள பாவக்குற்றங்கள் நீங்கி) மெய்யுணர்வொளி ஓங்கி நிற்கும்.