அருள் உடைமை
குறள் # 241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள
குறள் # 242
நல்லாற்றால் நாடி அருளாள்க; பல்லாற்றால் தேரினும் அஃதே துணை
குறள் # 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்
குறள் # 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை
குறள் # 245
அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி
குறள் # 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்துஒழுகு வார்
குறள் # 247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு
குறள் # 248
பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார் அற்றார்மற்று ஆதல் அரிது
குறள் # 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்
குறள் # 250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து

