Kural

திருக்குறள் #248
குறள்
பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது
குறள் விளக்கம்
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் பொருளைப் பெறுதல் இயலும். இரக்கம் இல்லாதவர் பிறவிப் பயனை வீணாக்கியவர். மீண்டும் (இரக்கப்பண்பை வளர்க்கும் மனிதப் பிறவியைப்) பெறுதல் அரிதாகும்.