Kural

திருக்குறள் #244
குறள்
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
குறள் விளக்கம்
அழியும் உடலில் வாழும் அழியா உயிர்களை தெய்வமாகக் கருதிப் போற்றி இரக்க குணமாகிய அருளால் உள்ளத்தை ஆளுபவர்க்கு தனது உயிருக்கு (ஜீவாத்மாவிற்கு) துன்பம் வருமோ என்று அஞ்சுதற்குக் காரணமாகிய தீயசெயல்கள் உண்டாகாது என அறிஞர் கூறுவர்.