குறள்
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து
குறள் விளக்கம்
தன்னைக் காட்டிலும் மெலிந்தவரிடத்து (வலிமை குறைந்தவர்களிடத்தில்) தான் இரக்கமின்றி செயல் படும்போது தன்னைக் காட்டிலும் வலிமையுடையவர் தன்னைத் துன்பப்படுத்தும்போது அவர் முன்பு அஞ்சி நிற்கும் தனது நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.