குறள்
நல்லாற்றால் நாடி அருளாள்க; பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை
குறள் விளக்கம்
நல்வழியிலே வாழ்பவர்களை சார்ந்திருந்து அனைத்துயிருக்கும் நன்மையளிக்கும் அருட்பண்புகளை உள்ளத்திற்கு அறிவுறுத்தி உள்ளத்தை ஆள வேண்டும். அறப்பிரிவுகளின் அனைத்து அறநெறிமுறைகளை நன்கு ஆராய்ந்து பார்த்தாலும் உயிரின், உள்ள அமைதிக்கு அருந்துணையாவது பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு இரக்கப்படுகின்ற பேரருட் குணமேயாகும்.