தீவினை அச்சம்
குறள் # 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு
குறள் # 202
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
குறள் # 203
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்
குறள் # 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு
குறள் # 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து
குறள் # 206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்
குறள் # 207
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்
குறள் # 208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று
குறள் # 209
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்
குறள் # 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்

