குறள்
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்
குறள் விளக்கம்
தனக்குத் துன்பம் தருபவரிடத்திலும் தீயசெயல்களை செய்யாமல் விடுவதற்கான அறிவானது (தமக்கு யாண்டும் இன்பத்தைத் தரும்) அனைத்து அறிவுகளுள்ளும் சிறந்த அறிவாகும் என அறிஞர்கள் சொல்லுவர்.