குறள்
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்
குறள் விளக்கம்
மிகப் பெரிய பகையை உடையவரும் அப்பெரிய பகையை முறையான உபாயத்தால் வெற்றிகொண்டு மேன்மையடைவர். ஆனால் நாம் செய்த தீயசெயல்களே நமக்கு துன்பத்தைத் தரும் காரணமாகி அழியாமல் உறுதியாக காலப்போக்கில் வருத்தும்.