Kural

திருக்குறள் #209
குறள்
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்
குறள் விளக்கம்
(ஒருவன்) தன்னைத் தானே நேசிப்பானாயின் மிகச்சிறிய தீயசெயல்களையும் செய்யாதிருக்க வேண்டும்.