குறள்

பயன்இல சொல்லாமை
குறள் # 191
பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
குறள் # 192
பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது
குறள் # 193
நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை
குறள் # 194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லார் அகத்து
குறள் # 195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்
குறள் # 196
பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்
குறள் # 197
நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று
குறள் # 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
குறள் # 199
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
குறள் # 200
சொல்லுக சொல்லின் பயன்உடைய சொல்லற்க
சொல்லின் பயன்இலாச் சொல்