குறள்
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து
குறள் விளக்கம்
உயிர் வாழ்வதற்கு பொருள் இல்லையென்று கருதி தீயசெயல்களை ஒருவன் பிறர்க்குச் செய்யாதிருப்பானாக. வறுமைத் துன்பத்தை அறிவின் துணைகொண்டு பொறுத்துக் கொள்ளாமல் தீய செயல்களைச் செய்வானேயானால் மேலும் மேலும் அதிகமான வறுமைக்கு ஆளாகித் துன்பமடைவான்.