குடிசெயல் வகை
குறள் # 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுஉடையது இல்
குறள் # 1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி
குறள் # 1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்
குறள் # 1024
சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு
குறள் # 1025
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய்ச் சுற்றும் உலகு
குறள் # 1026
நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்ஆண்மை ஆக்கிக் கொளல்
குறள் # 1027
அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்து ஆற்றுவார் மேற்றே பொறை
குறள் # 1028
குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து மானம் கருதக் கெடும்
குறள் # 1029
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு?
குறள் # 1030
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும் நல்ஆள் இலாத குடி

