Kural

திருக்குறள் #1024
குறள்
சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு
குறள் விளக்கம்
தன்னுடைய கூடி உயர்வதற்கான செயலை (செய்வதற்கு) விரைந்து முயலுபவருக்கு (அதனை எவ்வாறு முடிப்பது என்பதைப் பற்று) ஆராயாமல் தானாகவே (செயலின்) முடிவானது நன்கு நிறைவேறும்.