Kural

திருக்குறள் #1028
குறள்
குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து
மானம் கருதக் கெடும்
குறள் விளக்கம்
சோம்பேறித்தனமாக இருந்துகொண்டு, தன்னுடைய மானத்தைப் பெரிதாக எண்ணிக்கொண்டு (செயலாற்றாமல் இருந்தால்) குடியின் பெருமை கெட்டுவிடும். (எனவே) தம்முடைய குடி உயர அயராது உழைப்பவருக்குக் கால நேரம் இல்லை.