நாண் உடைமை
குறள் # 1011
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற
குறள் # 1012
ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறுஅல்ல நாண்உடைமை மாந்தர் சிறப்பு
குறள் # 1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு
குறள் # 1014
அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல் பிணிஅன்றோ பீடு நடை
குறள் # 1015
பிறர்பழியும் தழ்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபது என்னும் உலகு
குறள் # 1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்
குறள் # 1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர்
குறள் # 1018
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின் அறம்நாணத் தக்கது உடைத்து
குறள் # 1019
குலம்சுடும் கொள்கை பிழைப்பின்; நலம்சுடும் நாணின்மை நின்றக் கடை
குறள் # 1020
நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி யற்று

