குறள்
அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்து
ஆற்றுவார் மேற்றே பொறை
குறள் விளக்கம்
போர்க்களத்தில் (பலருக்கு இடையில்) பொறுப்பேற்றுக்கொள்ளும் அஞ்சாத வீரனைப் போலத் தாம் பிறந்த குடியிலும் (பலர் இருந்தாலும்) அதன் பாரத்தை தாங்க வல்லவர் மேல்தான் (பொறுப்பு உள்ளது).