Kural

திருக்குறள் #1029
குறள்
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு?
குறள் விளக்கம்
மூவகைத் துன்பங்களுக்கும் இலக்காகும் தனது குடும்பத்தி அம்மூவகைத் துன்பமும் தாக்காதவாறு காக்க முயற்சிப்பவனது உடலானது, துன்பத்திற்கே இருப்பிடமானதன்றோ?!