குறள்

பண்புடைமை
குறள் # 991
எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு
குறள் # 992
அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு
குறள் # 993
உறுப்புஒறுத்தல் மக்கள்ஒப்பு அன்றால்; வெறுத்தக்க
பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு
குறள் # 994
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு
குறள் # 995
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி; பகையுள்ளும்
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு
குறள் # 996
பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
குறள் # 997
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்
குறள் # 998
நண்புஆற்றா ராகி நயம்இல செய்வார்க்கும்
பண்புஆற்றார் ஆதல் கடை
குறள் # 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
குறள் # 1000
பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று