Kural

திருக்குறள் #999
குறள்
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
குறள் விளக்கம்
(பண்பில்லாமையால்) பிறருடன் கலந்து அகமகிழ்வோடு பழகுவதற்கு இயலாதவர்க்கு மிகப் பெரிய இந்தப் பூமியானது ஒளிமிகுந்த பகற்பொழுதிலும் இருளில் கிடப்பதாம்.