நன்றிஇல் செல்வம்
குறள் # 1001
வைத்தன்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்
குறள் # 1002
பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு
குறள் # 1003
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை
குறள் # 1004
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்?
குறள் # 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல்
குறள் # 1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான்
குறள் # 1007
அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று
குறள் # 1008
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று
குறள் # 1009
அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்
குறள் # 1010
சீரூடைச் செல்வர் சிறுதுனி மாரி வறம்கூர்ந் தனையது உடைத்து

